கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர். இதனால் இறப்பு எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை, ஜூலை.6-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர். இதனால் இறப்பு எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.
56 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தாலும் இறப்பு விகிதம் குறையவில்லை. தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது.
அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து309 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 86 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 4 பேர் பலி
இந்த நிலையில் கொரோனாவுக்கு மாவட்டத்தில் மேலும் 4 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story