போலீசார் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கின
கோவை போலீசார் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கின.
ஆலங்குடி, ஜூலை.6-
ஆலங்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது மோசடி புகார் கூறப்பட்டதை தொடர்ந்து கோவை போலீசார் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கின.
மோசடி புகார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் பன்னீர் செல்வம். இவர் கோவையை சேர்ந்த மருத்துவர் மாதேஸ்வரனிடம் கடன் வாங்கி தருவதாக ரூ.2 கோடியே 85 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் 4 தனிப்படையினர் நேற்று முன்தினம் ஆலங்குடி வந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக போலீசார் சோதனை நடத்தினர்.
ஆவணங்கள் சிக்கின
இந்த சோதனை குறித்து கோவை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது கூறுகையில், ``2 நாட்களாக நடந்து வந்த சோதனை முடிவடைந்துள்ளது. இந்த சோதனையின் போது பல ஆவணங்கள் சிக்கின. இவற்றை ஆராய்ந்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். இவருக்கு சொந்தமான அலுவலகத்தில் லாக்கர் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு `சீல்' வைத்துள்ளோம். ஊராட்சி மன்ற தலைவரான பன்னீர்செல்வம் தலைமறைவாக உள்ளார். சென்னையில் அவர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்ற போது தப்பிவிட்டார். தொடர்ந்து அவரை தேடி வருகிறோம்'' என்றார்.

Related Tags :
Next Story