கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு
திருப்பத்தூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைத் தலைவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினருமான ம.சிட்டிபாபு தலைமையில் எஸ்.சி.பிரிவு தலைவர் பிரபு, என்.நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் நேரில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை தகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கலப்புத்திருமணம் செய்த எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பி.சி. மக்களுக்கு டெல்லி அம்பேத்கர் பவுண்டேஷன் வழங்கும் ரூ.2.50 ஆயிரம் நிதி விரைவாக வழங்க மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி காலனியில் வசிக்கும் செல்வராஜியின் மகன் பிரபு என்பவர் உள்பட பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ராஜாவின் மகன் நித்தியகுமார் என்பவர் பணமோசடி செய்து தலை மறைவாக உள்ளார். அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இதேபோல் வேலூர் முன்னாள் ராணுவ வீரர் நரேஷ்குமார் என்பவரிடம் ரூ.10 லட்சத்தை நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த சின்னத்தம்பி கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட அவரை பி.சி.ஆர். சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story