வாலாஜாபேட்டை அருகே வாலிபரின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்


வாலாஜாபேட்டை அருகே வாலிபரின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்
x
தினத்தந்தி 6 July 2021 12:10 AM IST (Updated: 6 July 2021 12:10 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபேட்டை அருகே வாலிபரின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்

சிப்காட் 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலிங்கம் (வயது 23). இவரது மனைவி மல்லிகா (21).  கிருஷ்ணாபுரத்தில் கணவருடன் வசித்து வந்த மல்லிகா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீடான வாலாஜாபேட்டைக்கு சென்றுள்ளார். 

கடந்த மாதம் 22-ந் தேதி விஜயலிங்கம் இறந்துவிட்டதாக மல்லிகாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக மல்லிகா, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவிடம் புகார் அளித்தார். இதனையடுத்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story