அவினாசியில் கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை
அவினாசியில் கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை
அவினாசி
அவினாசியில் கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கொலை
அவினாசி அருகே உள்ள சாமந்த கோட்டையை சேர்ந்தவர் நாட்டாமை என்கிற ஜெகநாதன் வயது 48. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலி. ஜெகநாதன் தனது மனைவியை விட்டு பிரிந்து அவினாசி மங்கலம் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் தங்கி அந்த பகுதியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு தலை உடைந்த நிலையில் ஜெகநாதன் அவர் தங்கி இருந்த பாலத்தின் கீழ் பிணமாக கிடந்தார். மர்மஆசாமிகள் இவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து உள்ளது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து சென்று ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
7 பேரிடம் விசாரணை
மேலும்இந்த கொலை தொடர்பாக அங்கு தங்கி இருந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஜெகநாதன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணைசெய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story