மாவட்ட செய்திகள்

முன்விரோத தகராறில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு + "||" + Scythe cut for teenagers in an antecedent dispute

முன்விரோத தகராறில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

முன்விரோத தகராறில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
முன்விரோத தகராறில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
சிவகாசி
திருத்தங்கல்-பழைய சாட்சியாபுரம் ரோட்டில் வசித்து வருபவர் கனக ராஜ் (வயது 21). இவர் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த கனகராஜ் தனது நண்பர்கள் அய்யனார், பாண்டிமணி, சுதாகர், அந்தோணி ஆகியோருடன் குறுக்குபாதையில் உள்ள ஒரு மைதானத்தில் மது அருந்தி உள்ளார். அப்போது அதே மைதானத்தில் மது அருந்திக்கொண்டிருந்த பனையடிப்பட்டி தெருவை சேர்ந்த சிட்டிசன் என்கிற சிவா, சிட்டு, சாமுவேல் ஆகியோர் தகராறு செய்ததாக கூறப் படுகிறது.  பின்னர் சிறிது நேரம் கழித்து கனகராஜ் தனது வீட்டின் அருகில் நண்பர் அய்யனாரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிட்டு, சிவா, முத்துகுமார், சாமுவேல் மற்றும் சிலர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் கனகராஜை வெட்டினர். அப்போது அருகில் இருந்த அய்யனார் தடுத்துள்ளார். இதில் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
2. வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
3. விவசாயிக்கு அரிவாள் வெட்டு
மணிமுத்தாறு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
4. குடும்பத்தகராறில் மாமியார், மைத்துனருக்கு அரிவாள் வெட்டு; மருமகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
குளித்தலை அருகே குடும்பத்தகராறில் மாமியார், மைத்துனரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
சோழவந்தான் அருகே அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.