வேலூர் அருகே தங்கும் விடுதியில் பெண் பிணம்
வேலூர் அருகே தங்கும் விடுதியில் பெண் பிணம்
வேலூர்
அரியூர், ஜீவரத்தினம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடப்பதாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற பார்த்தனர். அப்போது விடுதி அறை கழிவறையில் அந்த பெண் பிணமாக கிடந்தார். உடலை போலீசார் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் தமிழ்மணி (வயது 67) என்பதும், கணவர் பெயர் ஆதியப்பன் என்பதும், கழிவறையில் கால்தவறி கீழே விழுந்து அடிப்பட்டதும் தெரியவந்தது. ஆனால் அவரின் முகவரி குறித்த விவரம் போலீசாருக்கு தெரியவில்லை. இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story