தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்
சாதிக்கொடுமையால் பேராசிரியர் விபின் என்பவர் ஐ.ஐ.டி.யை விட்டு வெளியேறியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் சாதி வன்மத்தோடு செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story