சாலை விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 6 July 2021 12:58 AM IST (Updated: 6 July 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலியானார்.

சமயபுரம்
ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 59). இவர், அப்பகுதியில் நகை கடை நடத்தி வந்தார். இவர், சம்பவத்தன்று லால்குடியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக மொபட்டில் சென்று விட்டு அங்கிருந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாளாடி அருகே உள்ள மலவராயர்சத்திரம் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது?, அதனை ஓட்டிச் சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story