ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்


ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
x
தினத்தந்தி 6 July 2021 1:44 AM IST (Updated: 6 July 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

ஜெயங்கொண்டம்:

செத்து மிதக்கும் மீன்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள புது ஏரியில், மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.இது குறித்து ஜெயங்கொண்டம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் நாளுக்கு நாள் துர்நாற்றம் அதிகரித்து வருவதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மூக்கை பொத்தியவாறே சென்று வருகின்றனர். துர்நாற்றம் காரணமாக வீட்டில் சாப்பிட முடியாமல் சிலர் வாந்தி எடுக்கும் நிலையும் உள்ளது.
கோரிக்கை
எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், ஏரியில் உள்ள நீரை பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி மூலம் ஏரி ஓரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story