55 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு- சேலத்தில் மதுபிரியர்கள் உற்சாகம்


55 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு- சேலத்தில் மதுபிரியர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 6 July 2021 3:39 AM IST (Updated: 6 July 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 55 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 55 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் திறப்பு
சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த கடைகள் அனைத்தும் நேற்று காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டன.
நேற்று காலை முதலே மதுபிரியர்கள் உற்சாகமாக டாஸ்மாக் கடைக்கு வந்தனர். சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து வந்த மதுபிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி சென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கடைகள் முன்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கடை முன்பு வட்டம் போடப்பட்டு இருந்தது.
55 நாட்களுக்கு பிறகு...
டாஸ்மாக் கடைகள் முன்பு பிரச்சினை ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 55 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரநாதன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story