சேலத்தில் ஜவுளி, நகைக்கடைகள் திறக்கப்பட்டன
சேலம் மாவட்டத்தில் ஜவுளி, நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நேற்று திறக்கப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஜவுளி, நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நேற்று திறக்கப்பட்டன.
நகைக்கடைகள் திறப்பு
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன.
இந்த மாதத்தில் முகூர்த்த நாட்கள் இருப்பதால் பொதுமக்கள் பலர் ஜவுளிக்கடைகளுக்கு சென்று துணிகளையும், நகைக்கடைகளுக்கு சென்று நகைகளையும் எடுத்து மகிழ்ந்தனர்.
உழவர் சந்தைகள்
இதேபோல் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. 50 சதவீத விவசாயிகள் மட்டுமே காய்கறிகள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். இதில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள், டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர். மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டதால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அங்கு சென்று உடற்பயிற்சி செய்தனர். மாவட்டங்களிடையே இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டதால் பலர் ஏற்காட்டுக்கு சென்றனர்.
Related Tags :
Next Story