திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்


திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 6 July 2021 8:30 AM IST (Updated: 6 July 2021 8:30 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்.

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட கிராமத் தெரு, சடையங்குப்பம் பாட்டை பகுதியில் 60 அடி சாலை உள்ளது. இந்த சாலையை ஆக்கிரமித்து சிலர் வீடுகளை கட்டி இருந்தனர்.

இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர் தேவேந்திரன் உத்தரவின்பேரில் உதவி செயற்பொறியாளர் நக்கீரன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். 40-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் ஆவடி அடுத்த அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் ஏரி புறம்போக்கு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Next Story