அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 July 2021 11:21 AM IST (Updated: 6 July 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்.கே.பேட்டை தாலுகா ராஜா நகரம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,

எங்கள் பகுதியில் கடந்த 1994 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் தங்களுக்கு நேரடியாக வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மேற்படி வீட்டு மனையை அளவீடு செய்து இதுநாள் வரையிலும் எங்களுக்கு மனை பட்டா பிரித்துக்கொடுக்கவில்லை. பலமுறை நாங்கள் வருவாய் துறையினரிடம் முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நாங்கள் பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள் போன்ற அரசின் எந்த திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே இனிமேலும் காலதாமதம் செய்யாமல் அரசு வழங்கிய வீட்டு மனையை முறையாகப் பிரித்து அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தலைமையில் இதுதொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story