தங்கையின் கணவர் வீட்டில் இளம்பெண் மர்மசாவு தூக்கில் பிணமாக தொங்கினார்


தங்கையின் கணவர் வீட்டில் இளம்பெண் மர்மசாவு தூக்கில் பிணமாக தொங்கினார்
x
தினத்தந்தி 6 July 2021 11:52 AM IST (Updated: 6 July 2021 11:52 AM IST)
t-max-icont-min-icon

தங்கையின் கணவர் வீட்டில் இளம்பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

செங்குன்றம்,

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு வீரபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் மஞ்சு(வயது 20). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவருடைய தங்கை சரண்யா. இவர், தனது கணவர் கார்த்திக்குடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவியை அழைத்துச்செல்ல வந்த கார்த்திக், அவர் வரமறுத்ததால் மஞ்சுவை மோட்டார்சைக்கிளில் கொளத்தூர் திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

சிறிது நேரத்தில் தங்கையின் கணவர் வீட்டில் மஞ்சு மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு உடலை தூக்கில் தொங்க விடப்பட்டதா? என்ற கோணத்தில் கார்த்திக்கிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story