நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கோர்ட்டு முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாகர்கோவில்,
வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சென்னை வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ரத்து செய்யவேண்டும் எனக்கோரியும், வக்கீல்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் கோர்ட்டுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கோர்ட்டு முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் வக்கீல்கள் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். இதில் சங்க செயலாளர் டி.கே.மகேஷ், பொருளாளர் விஸ்வராஜன், துணை தலைவர் பிரதாப், நூலகர் செந்தில் மூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பூதப்பாண்டியில் வக்கீல் சங்க தலைவர் பலவேசம் முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய கோர்ட்டுகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story