கோவில்பட்டியில் வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2021 11:50 AM GMT (Updated: 6 July 2021 11:50 AM GMT)

கோவில்பட்டி ெமயின் ரோட்டை இருவழிப்பாதையாக்க வலியுறுத்தி நேற்று வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி ெமயின் ரோட்டை இருவழிப்பாதையாக்க வலியுறுத்தி நேற்று வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து வாகன ஓட்டுநர்கள் நேற்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட அண்ணா அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் வாகன ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் கோரிக்ைக மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இருவழிப்பாதையாக்க...
 கோவில்பட்டி மெயின் ரோடு கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் இருந்து இளையரச நேந்தல் ரோடு சந்திப்பு வரை ஒரு வழிப் பாதையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி்க்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியில் 25 மீட்டர் பாதை ஒரு வழிப் பாதையாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மாதாங் கோவில் ரோடு வழியாக கதிரேசன் கோவில் ரோட்டிற்கு சென்று பார்க் ரோடு வழியாக செல்லும் நிலை உள்ளது. இந்த ரோட்டை இருவழிப்பாதையாக மாற்றவேண்டும்.
இதே போல கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள பாலத்தை விரிவு படுத்த வேண்டும், மெயின் ரோட்டில் உள்ள ஓடையை தூர்வாரி இரண்டு பக்கமும் தடுப்பு சுவர் கட்டி, தளம் அமைத்து கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல பணிகளை தொடங்க வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது.
உதவி கலெக்டர் உறுதி
மனுவை  மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story