தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் குறித்த அலோசனை கூட்டம் கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் நடந்தது


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்  புதிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் குறித்த அலோசனை கூட்டம்  கலெக்டர் செந்தில் ராஜ்  தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 6 July 2021 5:26 PM IST (Updated: 6 July 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி புதிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி புதிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
தேசிய நெடுஞ்சாலை
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு புதிதாக என்.எச்.32 தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான வழித்தடம் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வழித்தடங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சிறப்பு வருவாய் அலுவலர் (இஸ்ரோ) செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சங்கர், தூத்துக்குடி விமான நிலைய உதவி பொது மேலாளர் பிஜூ, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாமிரபரணி வடிநிலக் கோட்டம் செயற்பொறியாளர் அண்ணாதுரை, ஸ்ரீவைகுண்டம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் பண்டாரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்
பழனிவேலாயுதம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பயண தூரம் குறையும்
இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை திருச்செந்தூர் வழியாக புதிய நெடுஞ்சாலை என்.எச்.32 அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்லும் போது 58 கிலோ மீட்டர் தூரம் வரை பயண தூரம் மற்றும் நேரம் குறைவாகும். ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் இரு வழிசாலை உள்ளது. அதனை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் வழித்தடங்கள் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.

Next Story