திருக்கோவிலூரில் விவசாயிகள் போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


திருக்கோவிலூரில் விவசாயிகள் போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x

திருக்கோவிலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருக்கோவிலூர்,

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மார்க்கண்டேய நதி மற்றும் யார் கோள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி தடுப்பணைகள் கட்டியுள்ளதை ​ கண்டித்தும், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள அணைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய மற்றும் கர்நாடக அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சரவணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் தர்மேந்திரன், மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் வளர்மதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவி, நகரச்செயலாளர் பஷீர் அகமது, கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேல்மாறன் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். முடிவில் விவசாய சங்கத்தின் வட்ட செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார்.

Next Story