மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிப்பு


மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2021 6:43 PM IST (Updated: 6 July 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களை சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கும், வெளிநாடு செல்வோருக்கும் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது. அதேபோல ஒன்றியத்தில் காளி, இளந்தோப்பு, வில்லியநல்லூர், முருகமங்கலம், மணல்மேடு ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. 

பட்டவர்த்தி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கும், குத்தாலம் ஒன்றியத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கநல்லூர், தேரழுந்தூர், கிளியனூர் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 

சீர்காழி ஒன்றியத்தில் திருவெண்காடு, பூம்புகார், காத்திருப்பு, வள்ளுவக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கொள்ளிடம் ஒன்றியத்தில் கொள்ளிடம், நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் செம்பனார்கோவில், சங்கரன்பந்தல், கீழையூர், மேலப்பெரும்பள்ளம், திருக்கடையூர், ஆக்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொறையாறு அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story