மயிலாடுதுறை மாவட்டத்தில், இதுவரை 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கலெக்டர் லலிதா தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய அளவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தி கொண்டு, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். படிப்பு, வேலை தொடர்பாக வெளிநாடு செல்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மயிலாடுதுறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 2 தவணை தடுப்பூசி 18 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சுகாதார இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் பிரகாஷ் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story