தாராபுரத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்
தாராபுரத்தில் ஆதித்தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்துஅண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். அப்போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கருப்புக்கொடி ஏந்தி பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற வகையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாடில்லாத பெட்ரோல், டீசல் விலையை ஒழுங்குபடுத்தக்கோரியும், 10 ஆண்டுகாலமாக அருந்ததியர் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு நடந்த குளறுபடிகளை கண்டு அதற்குரிய விசாரணையை கமிஷனை அமைக்க வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அருந்ததியர் இட ஒதுக்கீடு 3 சதவீதத்தை 6 சதவீதமாக உயர்த்தக் கோரி கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் அங்கமுத்து, குண்டடம் ஒன்றிய தலைவர் கன்னியப்பன், மூலனூர் ஒன்றிய தலைவர் வீரகுமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story