நேதாஜி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் வருகை அதிகரித்து வருகிறது.


நேதாஜி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
x
தினத்தந்தி 6 July 2021 9:40 PM IST (Updated: 6 July 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

நேதாஜி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

உடுமலை
உடுமலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேதாஜி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து, விளையாடுவதற்கு விளையாட்டு வீரர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
விளையாட்டு மைதானம்
உடுமலை கல்பனா சாலையில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். 
அத்துடன் விளையாட்டு வீரர்கள் ஆக்கி, கூடைபந்து, இறகுபந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவார்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் விளையாடுவதற்கு அதிக அளவில் வருவார்கள். அத்துடன் விளையாட்டு போட்டிகளும் நடப்பதுண்டு.
திறக்கப்பட்டது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின்2-வது அலை வீசி வருவதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி இரவு பூட்டப்பட்டது. அதனால் நடைபயிற்சி செல்வோர் சிலர் சாலைபகுதிகளில் நடைபயிற்சி சென்று வந்தனர். பலர் நடைபயிற்சி செல்லமுடியாமல் போனது. விளையாட்டு வீரர்களும் தவிப்பிற்குள்ளாயினர்.
இந்த நிலையில் முழு ஊரடங்கில் அளிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளின்படி உடுமலையில் நேதாஜி விளையாட்டு மைதானம் கடந்த மாதம் (ஜூன்) 28-ந்தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்சியடைந்து நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
விளையாட்டு வீரர்கள்
இதைத்தொடர்ந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த மைதானத்திற்கு மீண்டும்வந்து விளையாடத்தொடங்கியுள்ளனர். நேற்று இளைஞர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.இந்த மைதானத்தில் நேற்று இளைஞர்கள், கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறுவிளையாட்டுகளை விளையாடினர். 

Next Story