மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குடிமங்கலம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் உடுமலை தாலுகா மோட்டார் வாகன சங்கத்தலைவர் சுதாசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக்கண்டித்தும் காப்பீடு, வங்கி கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு வழங்க கோரியும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆர்.டி.ஓ அலுவலக பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் வருவாய் இழந்து தவிக்கும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் உடுமலை தாலுகா பொறுப்பாளர் ரங்கநாதன், விவசாய சங்க பொறுப்பாளர் வெங்கடேஷ் ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story