பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம்: லாரி கிளீனர் உள்பட 3 பேர் கைது


பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம்: லாரி கிளீனர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 9:45 PM IST (Updated: 6 July 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்1 மாணவியை கடத்தி திருமணம் செய்த லாரி கிளீனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் கடந்த மாதம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சிறுமியை, அடிமலை புதூரை சேர்ந்த லாரி கிளீனர் சென்னப்பன் (வயது 20) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது லாரி கிளீனர், தனது நண்பர் சுகவனம் (24) உதவியுடன் சிறுமியை கடத்தி சென்று மேச்சேரி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்குள்ள உறவினர் ரவிக்குமார் வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்தி திருமணம் செய்த லாரி கிளீனர் சென்னப்பன், உடந்தையாக இருந்த சுகவனம், ரவிக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story