ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
x
தினத்தந்தி 6 July 2021 4:19 PM GMT (Updated: 6 July 2021 4:19 PM GMT)

ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

ஊத்துக்குளி
ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெற்றி வேலாயுதசாமி கோவில்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனால்  தமிழ்நாடு அரசு ஊரடங்கில் தொடர்ந்து தளர்வுகள் அளித்து வருகிறது. அதன்படி விளைவாக அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் கடந்த 5-ந்தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று கிருத்திகை திருநாளை முன்னிட்டு இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதிக்கப்பட்டு பின்னர் கிருமிநாசினி வழங்கப்பட்டு சமூக இடைவெளிவிட்டு வரிசையில் சென்று சாமி தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
முக கவசம்
சாமி தரிசனத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் அரசு வழிகாட்டு முறைகளின் படி முக கவசம் அணிந்து வரவேண்டும்.மேலும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். 60  வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும் 10 வயதிற்கு உட்பட் ட குழந்தைகள் மற்றும் சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடையவர்களும் தரிசனத்திற்கு அனமதிக்கப்படமாட்டார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
------------

Next Story