தெருநாய்கள் கடித்து மான் செத்தது


தெருநாய்கள் கடித்து மான் செத்தது
x
தினத்தந்தி 6 July 2021 9:54 PM IST (Updated: 6 July 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

தெருநாய்கள் கடித்து மான் செத்தது

அவினாசி
அவினாசி ஒன்றியம் புதுப்பாளையம், கோதபாளையம், தெக்கலூர் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. சரிவர பருவமழை இல்லாமல் இங்கு குளம், குட்டைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் காட்டுப்பகுதியிலிருந்து மான்கள் தண்ணீருக்காக நகர்ப்புறங்களுக்கு வருகிறது. அப்போது தெருநாயக்ள் மான்களை துரத்தி கடிக்கிறது. 
அவ்வாறு நேற்று காட்டுப்பகுதியிலிருந்து 1 வயது பெண்மான் அவினாசி மங்கலம் ரோடு கொல்லங்காட்டுக்கு வந்துள்ளது. இதைப் பார்த்த தெருநாய்கள் அந்தமாளை துரத்தி சென்று கடித்து குதறியதால் மான் செத்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து செத்து கிடந்த மானின் உடலை மீட்டு கருணை பாளையம் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

Next Story