பழனி அருகே உலாவரும் ஒற்றை யானை


பழனி அருகே  உலாவரும் ஒற்றை யானை
x
தினத்தந்தி 6 July 2021 9:57 PM IST (Updated: 6 July 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே ஒற்றை யானை உலா வருகிறது.

பழனி :
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பழனி அருகே உள்ள வட்டமலை பகுதியில் கொடைக்கானல் சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இந்நிலையில் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பது வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சாலையில் உலா வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story