மயிலாடுதுறையில் திருநங்கை மீது தாக்குதல் வாலிபர் கைது


மயிலாடுதுறையில் திருநங்கை மீது தாக்குதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 9:59 PM IST (Updated: 6 July 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

திருநங்கை மீது தாக்குதல் நடந்தது

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை கிட்டப்பா நகர் வேதம் பிள்ளை காலனி தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது29). திருநங்கையான இவர் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது மது போதையில் அங்கு வந்த கூறைநாடு காவிரி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சூர்யா(22) திருநங்கைகள் குறித்து கேவலமாக பேசியதாக தெரிகிறது. இதை கலைச்செல்வி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா உருட்டுக்கட்டையால் கலைச்செல்வியை தாக்கி அவரது வீட்டுக்குள் நுழைந்து டி.வி. உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கலைச்செல்வி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து   சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story