கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 106 பேர் குணமடைந்தனர்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 106 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 6 July 2021 10:16 PM IST (Updated: 6 July 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 106 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வருகிறது. நேற்று 70 பேர் மட்டுமே புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 40 ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 106 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 342 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். ஆஸ்பத்திரிகளில் தற்போது 764 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 308 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story