ஓசூரில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை


ஓசூரில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 6 July 2021 10:16 PM IST (Updated: 6 July 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஓசூர்:
பிறந்த நாள் கொண்டாட மறுப்பு
ஓசூர் கோகுல்நகர் அருகே உள்ள குப்புசாமி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருடைய மகள் ஸ்ரீ அபூர்வா (வயது 32). இவருக்கும், அருண்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி ஸ்ரீ அபூர்வா தனது மகனின் பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று கணவரிடம் கூறினார். அதற்கு அருண்குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீ அபூர்வா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீ அபூர்வா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளியும் விசாரணை நடத்தி வருகிறார்.
இளம்பெண் தற்கொலை
ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி விஜயவாணி (27). இவர்கள் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. விஜயவாணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் சரவணன் (37). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story