இளையான்குடி,
மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது மானாமதுரை தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுப.அன்பரசன், திருப்பத்தூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாலசுப்பிரமணியன், சிவகங்கை தொகுதி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் செங்கோல், இளையான்குடி வடக்கு ஒருங்கிணைப்பாளர் கண்ணன், இளையான்குடி மேற்கு ஒருங்கிணைப்பாளர் அழகேஷ் ஆகியோர் சேர்த்து புகார் மனு அளித்து உள்ளனர்.