டாஸ்மாக் கடைகளில் ரூ 13 ¾ கோடிக்கு மது விற்பனை
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.13¾ கோடிக்கு மது விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.13¾ கோடிக்கு மது விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடைகள்
கோவை வடக்கு பகுதியில் 158, தெற்கு பகுதியில் 135 என மாவட் டத்தில் மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
பின்னர் தொற்று குறைந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். ஆனாலும் கூட்டம் குறைவாக இருந்தது.
ரூ.13¾ கோடிக்கு விற்பனை
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது பாட்டில்கள் விலை சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு உள்ளதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டினர். ஆனாலும் மதுபாட்டில்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், கோவை வடக்கு பகுதியில் ரூ.7 கோடியே 26 லட்சத்து 33 ஆயிரம், தெற்கு பகுதியில் ரூ.6 கோடியே 53 லட்சம் என ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.13 கோடியே 79 லட்சத்து 33 ஆயிரத்துக்கு மதுப்பாட்டில்கள் விற்பனையாகி உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story