அனைத்து கடை உரிமையாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி வேண்டுகோள்


அனைத்து கடை உரிமையாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 July 2021 10:49 PM IST (Updated: 6 July 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி கூறினார்


கள்ளக்குறிச்சி

விழிப்புணர்வு கூட்டம்

காவல்துறை சார்பில் அனைத்து வியாபாரிகளுக்கான கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:-

கடைகளுக்கு சீல்

கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சுகாதாரத்துறை மூலம் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளின் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது. இதை மீறினால் கடுமையான நடவடிக்கை 
எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story