திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரம் பகுதியில் உள்ள கூத்தலூர் வாடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி லீலா (வயது 27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு லீலா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றிஅவர் இறந்தார். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.