கடலூர் முதுநகர் அருகே தொழிற்சாலை பணிக்கு சென்ற தொழிலாளி திடீர் சாவு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் சாலை மறியல்


கடலூர் முதுநகர் அருகே தொழிற்சாலை பணிக்கு சென்ற தொழிலாளி திடீர் சாவு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 July 2021 10:56 PM IST (Updated: 6 July 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே தொழிற்சாலை பணிக்கு சென்ற தொழிலாளி திடீரென உயிரிழந்தாா்.

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அடுத்த குடிகாடு பகுதியை சேர்ந்தவர்  சேகர் (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக கடந்த 30 ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார்.

நேற்று காலை இவர் வழக்கம் போல் பணிக்கு வந்தார். அப்போது, தொழிற்சாலை வாயில் பகுதியில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே அவருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சண்.முத்து கிருஷ்ணன் தலைமையிலான சேகரின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிகாட்டில் கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, கலைந்து போக செய்தனர். .இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story