7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது


7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 11:00 PM IST (Updated: 6 July 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

போடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

உத்தமபாளையம்: 

போடியில் இருந்து கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்ல ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி தலைமையில் போலீசார் போடி பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்குள்ள ஜமீன்தார் வீதியில் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அந்த வீட்டில் இருந்த கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த பாண்டி (வயது 28) என்பவரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story