பயிர் காப்பீட்டு திட்ட பணியாளர் குடும்பத்துடன் தர்ணா
சங்கராபுரத்தில் பயிர் காப்பீட்டு திட்ட பணியாளர் குடும்பத்துடன் தர்ணா
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் குப்பன் மகன் விவேகானந்தன்(வயது 33). இவர் சங்கராபுரம் வேளாண்மை அலுவலகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு தற்காலிக பணியாளராக கடந்த 4 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேகானந்தனை திடீரென வேலைக்கு வரவேண்டாம் என்று உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று சங்கராபுரம் வேளாண்மை அலுவலகம் முன்பு மனைவி சாவித்திரி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்து வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி விவேகானந்தனை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேலை சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து குடும்பத்துடன் சென்றார்.
Related Tags :
Next Story