வால்பாறையில் பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட ஒப்பந்ததாரர் கைது


வால்பாறையில் பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட ஒப்பந்ததாரர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 11:09 PM IST (Updated: 6 July 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

வால்பாறை

வால்பாறை அண்ணா நகரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இவர் கூட்டுறவு காலனி பகுதியில் தனியார் ஒருவர் கட்டி வரும் வீட்டிற்கு வேலைக்கு சென்றார். தொடர்ந்து அங்கு அவர் தனியாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கட்டிட ஒப்பந்ததாரர் காமராஜ்நகரை சேர்ந்த தாமஸ் (வயது 44) என்பவர் வந்தார். தொடர்ந்து தனியாக இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். உடனடியாக அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் விரைந்து வந்தனர். இதற்கிடையில் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு தாமஸ் தப்பி சென்றுவிட்டார்.

இதன் காரணமாக அந்த பெண் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.  இதனைக்கண்ட அந்த பெண்ணின் கணவர், அவரிடம் விசாரித்தார். அப்போது கட்டிட ஒப்பந்ததாரர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக அழுது கொண்டே கூறினார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர், வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கட்டிட ஒப்பந்ததாரர் தாமசை கைது செய்தனர். 

Next Story