மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,
இதில், ராமநாதபுரம் மத்திய மாவட்ட துணைத்தலைவர் ஆஷிக் சுல்தான், மாவட்ட பொருளாளர் ஹமீது சபிக், மாவட்ட துணைச் செயலாளர்கள் யாசர் அரபாத், பிஸ்மி சேக், த.மு.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் ரைஸ் இப்ராஹிம், மாவட்ட தொண்டரணி செயலாளர் நெய்னா முஹம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கட்சியின் நகர் செயலாளர் முகமது அமீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டிக்கும் வகையிலும், மத்தியை அரசை கண்டித்து மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை ஏற்றி வைத்து சாலைகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story