புதுப்பாளையத்தில் 2 போலி டாக்டர்கள் தப்பி ஓட்டம்


புதுப்பாளையத்தில் 2 போலி டாக்டர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 6 July 2021 11:26 PM IST (Updated: 6 July 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் 2 போலி டாக்டர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கம்

போலி டாக்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சையளித்து வருவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க நேற்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி தலைமையில், செங்கம் மருத்துவ அலுவலர் அருளானந்தம் மற்றும் மருத்துவ குழுவினர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உள்பட போலீசார் புதுப்பாளையம் பகுதிக்கு சென்றனர்.

அதிகாரிகள் வருவதை பார்த்ததும் போலி டாக்டர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்ததாக துரைஜெயராமன் (வயது 70) மற்றும் குமார் (45) ஆகிய இருவர் மீது போலீஸ் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 
பொருட்கள் பறிமுதல்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். முன்னதாக குமார் என்பவர் நடத்தி வந்த மருத்துவமனையில் இருந்த பொருட்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Next Story