ஓட்டேரியில் சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரம்


ஓட்டேரியில் சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரம்
x
தினத்தந்தி 7 July 2021 12:19 AM IST (Updated: 7 July 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டேரியில் சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரம்

வேலூர்

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகிறது. பூமி குளிர்ந்து மண் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. அதன்காரணமாக ஓட்டேரி பஸ்நிறுத்தம் அருகே வேலூர்-ஆரணி சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் நேற்று மாலை திடீரென வேரோடு சாய்ந்தது. இதில், யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. சாலையின் நடுவே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாகாயம் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அந்த சாலை வழியாக வந்த வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. 

வேலூர் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதைத்தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

Next Story