ஆரணியில் முதல் திருமணத்தை மறைத்து வாய் பேச முடியாத பெண்ணை 2வது திருமணம் செய்த என்ஜினீயர் கைது


ஆரணியில் முதல் திருமணத்தை மறைத்து வாய் பேச முடியாத பெண்ணை 2வது திருமணம் செய்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 12:24 AM IST (Updated: 7 July 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் முதல் திருமணத்தை மறைத்து வாய் பேச முடியாத பெண்ணை 2-வது திருமணம் செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

ஆரணி

2-வது திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் கீதா என்ற கீதாராணி (வயது 29), வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவருக்கும் ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த  வெங்கடாசலம்- பராசக்தி ஆகியோரின் மகன் சீனிவாசன் (32) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் கீதாராணி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் சீனிவாசன் தன்னை திருமணம் செய்வதற்கு முன்பு ஏற்கனவே ஒரு பெண்ணை பதிவு திருமணம் செய்திருப்பதாகவும், அதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

என்ஜினீயர் கைது

மேலும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சீனிவாசன் சிங்கப்பூரில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். அவர் மீதும், திருமணத்தை நடத்தி வைத்த சீனுவாசனின் தந்தை வெங்கடாசலம், தாய் பராசக்தி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

அதன்பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகினி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து போளுர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கம் கிளை சிறையில் அடைத்தார். தலைமறைவாக உள்ள  வெங்கடாசலம், பராசக்தி ஆகியோரை தேடி வருகிறார்.

Next Story