அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்


அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 7 July 2021 12:53 AM IST (Updated: 7 July 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பெரியதிருக்கொணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியதிருக்கோணம் -செட்டித்திருக்கோணம் சாலையில் எதிரே வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தனர். ஆனால் டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். 
இதையடுத்து லாரியில் சோதனை செய்தபோது பெரியதிருக்கோணம் பெரிய ஏரியில் இருந்து வண்டல் மண் அள்ளி, அரசு அனுமதியின்றி வி.கைகாட்டி பகுதிக்கு ஏற்றிச் சென்றது தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

Next Story