மனிதநேய மக்கள் கட்சியினர் 25 பேர் மீது வழக்கு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் காமாலுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார். முன்னதாக ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு சென்றனர். பின்னர் கட்சி கொடி ஏந்தி கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து விருத்தாசலம் சாலையில் உள்ள காந்தி பூங்கா முன்பு தள்ளுவண்டியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story