ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான்
ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தாமரைக்குளம்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்ட கோவில்கள், ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் கார்த்திகையை முன்னிட்டு நேற்று அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன், விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர் நகரில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
Related Tags :
Next Story