அரசு வழிகாட்டுதலுக்கு பிறகு குற்றாலத்தில் குளிக்க அனுமதி கலெக்டர் கோபால சுந்தரராஜ் தகவல்


அரசு வழிகாட்டுதலுக்கு பிறகு குற்றாலத்தில் குளிக்க அனுமதி  கலெக்டர் கோபால சுந்தரராஜ் தகவல்
x
தினத்தந்தி 7 July 2021 1:19 AM IST (Updated: 7 July 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

அரசு வழிகாட்டுதலுக்கு பிறகு குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

சிவகிரி:
அரசு வழிகாட்டுதலுக்கு பிறகு குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

சிவகிரி அருகே உள்ள ராயகிரி, உள்ளார் தளவாய்புரம், வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் ஆய்வு செய்தார். உள்ளார் தளவாய்புரத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அதாவது அங்கு பஸ் நிறுத்தத்திற்கு எதிரே உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், எனவே ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என்று கூறினர்.
உடனே கலெக்டர், பிரச்சினைக்குரிய இடத்தை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாசில்தார் ஆனந்துக்கு உத்தரவிட்டார்.  

ரேஷன் கடை

முன்னதாக, அவர் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா?, எடை அளவு குறைக்காமல் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 
இந்த ஆய்வின்போது மண்டல துணை தாசில்தார் சரவணன், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், ராயகிரி கிராம நிர்வாக அலுவலர்கள் புதியராணி, லோகநாதன், விஸ்வநாதப்பேரி தலையாரி வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். 

குற்றாலம்

இதற்கிடையே தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது பரவல் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த நிலையில் குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பொறுத்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story