மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 7 July 2021 1:25 AM IST (Updated: 7 July 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
 இந்த மழையினால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வத்திராயிருப்பு பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து வர தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
ராஜபாளையம் 
அதேபோல ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை, சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், அய்யனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. 
ராஜபாளையம் நகர் காந்தி சிலை ரவுண்டானா, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் மழையினால் கழிவுநீர் சாலையில் தேங்கி காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ேசத்தூர், தாயில்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Related Tags :
Next Story