சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் சி.ஐ.டி.யு. ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். வாகனங்களின் இன்சூரன்ஸ் மற்றும் தகுதிச் சான்றுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் எடுப்பதை தனியார் மயமாக்க கூடாது. புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து ஓட்டுனர்களுக்கும் கொரோனா கால நிவாரண நிதி ரூ.7,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வன்னியபெருமாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பால்ராஜ், மாரியப்பன், லெனின் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story