ஆட்டோவுக்கு தீவைப்பு


ஆட்டோவுக்கு தீவைப்பு
x
தினத்தந்தி 7 July 2021 1:39 AM IST (Updated: 7 July 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவுக்கு தீவைத்த நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

முக்கூடல்:

முக்கூடல் சேனையர் தெருவை சேர்ந்தவர் குகன்ராஜ். இவர் ஆட்டோ சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் தனது ஆட்டோவை அவரது வீட்டிற்கு வடபுறம் உள்ள தெருவில் ஓரமாக நிறுத்தி வைப்பது வழக்கம். 

இந்த நிலையில் இவரது உறவினர் ஆனந்துக்கும், முக்கூடல் தியாகராஜ் தெருவை சேர்ந்த முத்து விஜயராஜ் என்பவருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் குகன்ராஜ் ஆட்டோவுக்கு முத்து விஜயராஜ் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோ எரிந்து நாசமானது. இதுபற்றி குகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து விஜயராஜை தேடி வருகின்றனர். இவர் மீது முக்கூடல் மற்றும் பாப்பாக்குடி போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story